இன்று 01.09.2018 கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலப் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சியில், நெடுந்தூரம் நடந்துவந்து கல்வி கற்கும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 15 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பாடசாலை நிர்வாகத்தால் தெரிவுசெய்யப்பட்ட 15 மாணவர்களுக்குமான துவிச்சக்கரவண்டிகள் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால், தமது கட்சியின் முப்பதாவது ஆண்டு நிகழ்வாக வழங்கிவைக்கப்பட்டது.

இலண்டனில் வதியும் திரு. தர்மலிங்கம் நாகராஜா(பொக்கன்) அவர்கள் இதற்கான முழுமையான நிதியையும் வழங்கியிருந்தார்.கிராஞ்சி அ.த.க பாடசாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் கொடையாளி த.யோகராஜா, கட்சியின் தேசிய அமைப்பாளர் த. யோகராஜா(யோகன்), மத்தியகுழு உறுப்பினர்கள் வே.சிவபாலசுப்பிரமணியம், க.மகேந்திரன், FEED தொண்டர் அமைப்பின் செயற்பாட்டாளர்கள்,

வேரவில் பாடசாலை அதிபர், முன்னாள் முழங்காவில் பாடசாலை அதிபர், பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த இளைஞர்கள், பெற்றோர்கள், பயன்பெறும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

கிராஞ்சி கிராமத்தின் அத்தியாவசிய தேவைகள் பட்டியலிடப்பட்ட மனு ஒன்றும் நிகழ்வின்போது தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் அவர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.