வங்காள விரிகுடா வலய நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒன்றியமான பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பியுள்ளார்.

பிம்ஸ்டெக் மாநாடு நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் கடந்த 30ம் திகதி ஆரம்பமானதுடன், நேபாள பிரதமரின் தலைமையில் நேற்று பிற்பகல் மாநாட்டின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன. நேற்று இடம்பெற்ற இறுதி நிகழ்வின்போது அதன் தலைமைப் பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டுள்ளது.