முதன் முறையாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்காக இன்று முதல் 100 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது.

அத்துடன், தேசிய அடையாள அட்டை ஒன்றை திருத்திய இணைப் பிரதி ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக 250 ரூபா கட்டணத்தை செலுத்த வேண்டும். இதேவேளை, காணாமல்போன அடையாள அட்டை ஒன்றின் இணைப் பிரதி ஒன்றை வழங்குவதற்காக 500 ரூபாவும் அறவிடப்பட உள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.