புத்தளம் மாரி அம்மன் கோவிலின் உள்ளே நுழைந்த ஒருவர் அங்கிருந்த பணம் மற்றும் இயந்திரம் ஒன்றை திருடிச் சென்றுள்ள சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று மதியம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோவிலில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் உண்டியலை உடைத்து 4500 ரூபா பணத்தையும் இயந்திரத்தையும் திருடிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. திருடப்பட்டுள்ள பணம் மற்றும் பொருட்களின் பெறுமதி 15,000 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகநபர் குறித்த தகவல் எதுவும் கிடைக்காத நிலையில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்