வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி லிங்கநாதன் அவர்கள் தனது 2018ம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 31.08.2018 வெள்ளிக்கிழமை முற்பகல் 11மணியளவில் 40 நபர்களுக்கு பல்வேறு உதவித்திட்டங்களை வழங்கி வைத்துள்ளார்.

2,38,000 ரூபா பெறுமதியான 9 தண்ணீர் இறைக்கும் இயந்திரங்கள், 39,0000 ரூபா பெறுமதியான 15 தையல் இயந்திரங்கள், 21,0000 ரூபா பெறுமதியான 14 துவிச்சக்கரவண்டிகள், 20,0000 ரூபா பெறுமதியான கட்டிடப்பொருட்கள் 5 நபர்களுக்கு என மொத்தமாக 40 நபர்களுக்கு 10,38,000 ரூபா பெறுமதியான பொருட்கள் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது. கோவிற்குளத்தில் அமைந்துள்ள வடமாகாண சபை உறுப்பினரின் காரியாலயத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலசந்திரன், நகரசபை உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம், பிரதேசசபை உறுப்பினர்கள் க.ஜெகதீஸ்வரன், த.யோகராசா, வே.குகதாசன் சுயீவன், பரிகரன், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்க தலைவர் ரவீந்திரன், தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் ரஞ்சன், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.