Header image alt text

புளொட் இராணுவத்தளபதி தோழர் மாணிக்கதாசன் மற்றும் தோழர்களான வினோ, இளங்கோ ஆகியோரின் நினைவு கூரல் வவுனியாவில் இவர்களின் 19வது ஆண்டு நினைவாக கழகத்தோழர்கள் வவுனியாவில் உமாமகேஸ்வரன் வீதி கோவில் குளத்தில் அமைந்துள்ள செயலதிபர் தோழர் உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்திற்கு முன்பாக தாக சாந்தி நிலையம் அமைத்து தங்கள் அஞ்சலியை செய்தார்கள். Read more

இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (02.09.2018) காலை 7மணியளவில் யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபிக்கு அருகாமையில் இடம்பெற்றது. Read more

வடகிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் செயலணியில் கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சினைகள் குறித்த சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும் குடிநீர் போத்தல் தொழிற்சாலையினை நிறுத்தவது உள்ளிட்ட பல விடயங்களை கருத்தில் எடுத்து நடவடிக்கையெடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார். Read more

வவுனியா வடக்கு மருதோடை கிராம சேவையாளர் பிரிவிற்குப்பட்ட காஞ்சூரமோட்டை கிராமத்தில் வாழ்ந்த மக்கள் 36 குடும்பத்தினர் யுத்தத்தின் போது மடு முள்ளிவாய்க்கால் இறுதிவரை சென்று மீளவும் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்துள்ளனர். தற்போது தாயகம் திரும்பியுள்ள இவர்கள் தங்களது பூர்வீ க கிராமமான காஞ்சூரமோட்டைக்கு மீள்குடியேற வந்தபோது வன இலாகா திணைக்களம் இவர்களை தடுத்து நிறுத்தியது.இதனையடுத்து மருதோடை கிராம அபிவிருத்திச்சங்கத்தினர் இவ் விடயத்தினை கெளரவ மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். Read more