வவுனியா வடக்கு மருதோடை கிராம சேவையாளர் பிரிவிற்குப்பட்ட காஞ்சூரமோட்டை கிராமத்தில் வாழ்ந்த மக்கள் 36 குடும்பத்தினர் யுத்தத்தின் போது மடு முள்ளிவாய்க்கால் இறுதிவரை சென்று மீளவும் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்துள்ளனர். தற்போது தாயகம் திரும்பியுள்ள இவர்கள் தங்களது பூர்வீ க கிராமமான காஞ்சூரமோட்டைக்கு மீள்குடியேற வந்தபோது வன இலாகா திணைக்களம் இவர்களை தடுத்து நிறுத்தியது.இதனையடுத்து மருதோடை கிராம அபிவிருத்திச்சங்கத்தினர் இவ் விடயத்தினை கெளரவ மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.கெளரவ மாகாணசபை உறுப்பினர் அவ்விடத்திற்கு விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டு இவர்கள் மீளவும் இக்கிராமத்தில் குடியமர எதிர்வரும் 03.09.2018 அன்று நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் இதற்கான மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்போது உறுதி மொழியளித்தார்.இதன் போது கெளரவ மாகாணசபை உறுப்பினருடன் வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர்திரு.பொ.தேவராசா மற்றும் திரு .ஜேசுதாகர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.