முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அமரர் வி.தர்மலிங்கம், அமரர் மு.ஆலாலசுந்தரம் ஆகியோரின் நினைவுதின நிகழ்வு கடந்த 02.09.2018 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி என்பன இடம்பெற்றது. இதில் தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாண அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர். Read more