Header image alt text

க.ஹம்சனன்
யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குழி பாடசாலை மாணவி கிருஷாந்தியின் 22 ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

செம்மணிப் படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் இந்த மாணவி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடமான செம்மணிப் பகுதியில் காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.

கிருஷாந்தி குமாரசுவாமி கடந்த 1996 ஆம் ஆண்டு சக மாணவியின் மரண வீட்டிற்கு சென்றுவிட்டு தனது வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். Read more

முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனை – தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலைக்கு, பொதுமக்கள், மதம் சார்ந்தவர்கள் எவரும் செல்வதற்கு, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் தற்காலிக தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த 04ஆம் திகதியன்று குருந்தூர் மலைப் பகுதியில் புத்தர் சிலை ஒன்றை அமைக்கும் நோக்குடன் பிக்குமார் உள்ளிட்ட 12 பேர் சென்றுள்ளார்கள். இதன்போது, பிரதேச இளைஞர்கள் மக்கள் இணைந்து இவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். Read more

இந்திய-இலங்கை ஒன்றிணைந்த கடற்படை பயிற்சிகள் திருகோணமலை துறைமுக வளாகத்தில் நேற்று ஆரம்பமாகியுள்ளது. இதற்காக இந்தியாவின் 3 கடற்படை யுத்தக் கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்திய கடற்படைக்கு சொந்தமான உலங்குவானூர்தி மற்றும் கண்காணிப்பு படகுகளும் இணைந்துள்ளன. இந்த கூட்டுப் பயிற்சிகள் ஆறாவது தடவையாக இடம்பெறுகின்றன. Read more

யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் வீடு உடைத்தல் போன்ற வன்முறைச் சம்பவங்களின் பிரதான சூத்திரதாரியான ஆவா குழுவின் எதிரணி இளைஞன் ஒருவரை, புலனாய்வு பிரிவினர் நேற்றிரவு கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த கணேஜி என்ற இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆவா குழுவுடன் செயற்பட்ட இந்நபர், கடந்த பல காலங்களாக ஆவா குழுவில் இருந்து வெளியேறி தனியாக பல வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். Read more