இந்திய-இலங்கை ஒன்றிணைந்த கடற்படை பயிற்சிகள் திருகோணமலை துறைமுக வளாகத்தில் நேற்று ஆரம்பமாகியுள்ளது. இதற்காக இந்தியாவின் 3 கடற்படை யுத்தக் கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்திய கடற்படைக்கு சொந்தமான உலங்குவானூர்தி மற்றும் கண்காணிப்பு படகுகளும் இணைந்துள்ளன. இந்த கூட்டுப் பயிற்சிகள் ஆறாவது தடவையாக இடம்பெறுகின்றன. எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் திருகோணமலை துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் இந்த பயிற்சிகள் இடம்பெறவிருப்பதுடன், 11ம் திகதி முதல் 13ம் திகதி வரையில் திருகோணமலைக்கு அப்பால் வங்காள விரிகுடாவில் இந்த பயிற்சி நடவடிக்கைகள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.