Header image alt text

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை வியட்நாமிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பயணிக்கவுள்ளார்.

வியட்நாமின் ஹெனேய் நகரில் இடம்பெற உள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் அங்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆசிய அமைப்புக்களுடன் தொடர்புடைய நாடுகளிலிருந்தும், ஏனைய நாடுகள் பலவற்றிலிருந்தும் உயர் மட்ட பிரதிநிதிகள் பலர் இந்ந மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

க.ஹம்சனன்-

இலங்கையில் இடம்பெற்ற இனப் படுகொலைகளுக்கு நீதி கிடைக்கும் வரை தாம் ஓயப்போவதில்லை என தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சர்வதேச விசாரணை ஒன்றின் மூலம் மாத்திரமே நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குழி பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் 22 ஆவது நினைவு நாள் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். 

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த மண்ணிலே கடந்த காலத்தில் கிருஷாந்தி மாத்திரமல்ல அவரை போலவே பலர் கொல்லப்பட்டார்கள். Read more

100 மில்லியன் இலங்கை ரூபாய் செலவில் 150 மீன்பிடி படகுகளும், அவற்றுக்கான 150 மீன்பிடி படகு இயந்திரங்களும், முல்லைத்தீவு மீனவர்கள் 300 பேருக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்றுக்காலை முல்லைத்தீவின் கரைத்துரைப்பற்றில் இடம்பெற்றுள்ளது.

இந்திய அரசாங்கத்தினால் இலங்கையின் அபிவிருத்திக்கென வழங்கும் 3 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான நிதி உதவியில் 550 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியானது மானியமாக வழங்கப்பட்டு வருகின்றது. Read more

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் உள்ள சில வீடுகளுக்குள் புகுந்த அடையாம் தெரியாத சிலர் வீட்டு பொருட்களுக்கு சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்றையதினம் பிற்பகல் இடம்பெற்றதாக மானிப்பாய் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட காவல் நிலையங்களில் கடமையாற்றும் காவற்துறை உத்தியோகத்தர்கள் பலர் நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர் திருவிழா காவல் கடமையில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. Read more