யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் உள்ள சில வீடுகளுக்குள் புகுந்த அடையாம் தெரியாத சிலர் வீட்டு பொருட்களுக்கு சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்றையதினம் பிற்பகல் இடம்பெற்றதாக மானிப்பாய் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட காவல் நிலையங்களில் கடமையாற்றும் காவற்துறை உத்தியோகத்தர்கள் பலர் நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர் திருவிழா காவல் கடமையில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மானிப்பாய் காவற்துறையினர் இது தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.