பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை வியட்நாமிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பயணிக்கவுள்ளார்.

வியட்நாமின் ஹெனேய் நகரில் இடம்பெற உள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் அங்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆசிய அமைப்புக்களுடன் தொடர்புடைய நாடுகளிலிருந்தும், ஏனைய நாடுகள் பலவற்றிலிருந்தும் உயர் மட்ட பிரதிநிதிகள் பலர் இந்ந மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஆசிய அமைப்புக்களுடன் தொடர்புடைய நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடல் உன்றும் இதன்போது இடம்பெறவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.