100 மில்லியன் இலங்கை ரூபாய் செலவில் 150 மீன்பிடி படகுகளும், அவற்றுக்கான 150 மீன்பிடி படகு இயந்திரங்களும், முல்லைத்தீவு மீனவர்கள் 300 பேருக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்றுக்காலை முல்லைத்தீவின் கரைத்துரைப்பற்றில் இடம்பெற்றுள்ளது.

இந்திய அரசாங்கத்தினால் இலங்கையின் அபிவிருத்திக்கென வழங்கும் 3 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான நிதி உதவியில் 550 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியானது மானியமாக வழங்கப்பட்டு வருகின்றது.இந்த மானிய உதவிகளின் ஒரு அங்கமாக நேற்றைய தினம் படகுகள் மற்றும் இயந்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.