Header image alt text

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. இந்தக் கூட்டத்தொடர் இன்றுமுதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இன்றைய முதலாவது அமர்வில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மைக்கல் பசேல் ஜெரியா உரைநிகழ்த்தவுள்ளார். இந்தத் தடவை கூட்டத்தொடரில் இலங்கை குறித்த 2 அறிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறவுள்ளன. அத்துடன், இலங்கை தொடர்பில் 4 உப குழுக் கூட்டங்களும் ஜெனீவா பேரவை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்தாகத் தெரிவிக்கப்படுகின்றது. Read more

தர்மத்தின் பாசறையில் உருவானவரே!

தந்தை, தளபதியின் தொண்டனாகி
தேசியத்தை சுயபண்பாய் வரிந்தவரே!

கழகம், கட்சியென வாழ்வினை
முழுவதுமாய் விடுதலைக்கு தந்தவரே!

விழுவோமென நினைத்த பொழுதெல்லாம்
எழுந்திடுவோம் எனும் உறுதியுடன்
கரம் கொடுத்து வழிகாட்டியவரே!

அரசியல் ஆசானாய் எமக்கெல்லாம்
திசை காட்டி நிற்பவரே!

எங்கள் அனைவரினதும்
இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்!

அனைத்துத் தோழர்கள்,
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)

இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான கட்சித் தலைவர்கள் குழு இன்றுகாலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் அழைப்பையேற்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான கட்சித் தலைவர்கள் குழு நேற்று இந்தியாவுக்கு விஜயம் செய்தது. இந்த விஜயத்தில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன், Read more

இந்தோனேசிய கடற்படைக் கப்பலான ´கிரி சுல்தான் ஹசனுடின்´ மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

இக்கப்பல் இலங்கையில் தங்கியுள்ள காலப்பகுதியில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளது. இக்கப்பல் நாளை நாட்டைவிட்டு புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (அரசாங்க தகவல் திணைக்களம்)

மன்னார் முருங்கன் கட்டுக்கரை கோர மோட்டை பகுதியில் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணியில் உள்ள கிணற்றினுள் கடந்த புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தொகுதி வெடி பொருட்களை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்றுமாலை மீட்டுள்ளனர்.

குறித்த கிராமத்தில் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணியினை அதன் உரிமையாளர் கடந்த புதன் கிழமை துப்பரவு செய்துள்ளார். அதன்போது குறித்த காணியில் காணப்பட்ட கிணற்றினை துப்பரவு செய்யும் போது குறித்த கிணற்றில் ஆபத்தை விளைவிக்கும் வெடி பொருட்கள் காணப்படுவதை அவதானித்த குறித்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். Read more