இந்தோனேசிய கடற்படைக் கப்பலான ´கிரி சுல்தான் ஹசனுடின்´ மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

இக்கப்பல் இலங்கையில் தங்கியுள்ள காலப்பகுதியில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளது. இக்கப்பல் நாளை நாட்டைவிட்டு புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (அரசாங்க தகவல் திணைக்களம்)