Header image alt text

இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கிடையில், நேரடி விமான சேவையினை ஆரம்பிக்க இரு நாட்டு பிரதமர்களும் அவதானம் செலுத்தியுள்ளனர்.

வியட்நாமில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்துக்கொள்ளச் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வியட்நாம் பிரதமர் கிரையன் சூன் புக் ஆகியோருக்கிடையில் இன்று இடம்பெற்றுள்ள கலந்துரையாடலின் போதே இந்த விமான சேவைக் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. Read more

வட மாகாண சபையின் ஆயுட் காலம் ஒக்டோபர் 25ம் திகதியுடன் நிறைவடையும் நிலையில் மாபகாணசபையின் இறுதி அமர்வு ஒக்டோபர் மாதம் 23ம் திகதி முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் பிறந்தநாள் அன்று நடைபெற உள்ளது.

வட மாகாண சபையின் 131வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேசசபை உறுப்பினரும், கட்சியின் ஈவினை-புன்னாலைக்கட்டுவன் பிரதேச இணைப்பாளரும்,

புன்னாலைக்கட்டுவன் வடக்கு கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரும், புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலைய செயலாளரும், சமூக ஆர்வலருமான திரு.இரத்தினசிங்கம் கெங்காதரன்(J.P) அவர்களின் ஏற்பாட்டில், ஈவினை கற்பகப் பிள்ளையார் தேவஸ்தான பிரதமகுரு கெங்காதரக்குருக்கள் அவர்களின் ஆசீர்வாதத்துடன் 09.09.2018 ஞாயிற்றுக்கிழமை சிரமதானப்பணி இடம்பெற்றது. Read more

நீர்கொழும்பு மேற்கு கடற் பகுதியில் சட்டவிரோத குடியேறிகள் 88 பேரை ஏற்றிச் சென்ற படகு ஒன்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்றுகாலை கைது செய்யப்பட்ட குறித்த படகில் இருந்த அனைவரும் இலங்கையர்கள் என தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் சட்டவிரோதமாக குடியேறும் நோக்கில் வேறு நாடு ஒன்றுக்கு பயணிக்க முற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. Read more

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த 09 இலங்கையர்கள் அந்த நாட்டில் இருந்து இன்று காலை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் அனைவரும் அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான விஷேட விமானம் மூலம் இன்று காலை 08.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்களுடன் அந்த நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் பலரும் அந்த விமானத்தில் வந்துள்ளனர். Read more

யாழ். கொடிகாமம் பொலிஸாருக்குச் சொந்தமான வாகனம் ஒன்றை இனந்தெரியாத குழு ஒன்று கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அந்த வாகனத்துக்குள் பொலிஸாரின் ஆயுதங்கள் இருந்தன என்றும் கூறப்படுகின்றது. மணல் கடத்தலைப் பிடிக்கச் சென்றிருந்த வேளை, பொலிஸாரைத் தாக்கிவிட்டு வாகனம் கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. Read more

வியட்நாமின் ஹெனொய் நகரில் இடம்பெறும் ´ஆசியான்´ உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நேற்று நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தினூடாக வியட்நாமின், ஹெனொய் நகரத்தைச் சென்றடைந்தார்.

ஆசியான் அமைப்புக்குரிய நாடுகள் மற்றும் ஏனைய ஆசிய நாடுகளின் உயர் மட்டத் தலைவர்களின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ள ´ஆசியான்´ உலக பொருளாதார மாநாடு இன்று ஹெனொய் நகர தேசிய மாநாட்டு மத்திய நிலையத்தில் ஆரம்பமாகவுள்ளது. Read more

இந்த ஆண்டின் கடந்த காலப்பகுதியில் 1968 முறைப்பாடுகள் தமது ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழு கூறியுள்ளது. அந்த முறைப்பாடுகளில் 1264 முறைப்பாடுகளை விசாரணைக்காக தெரிவு செய்துள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி கூறியுள்ளார்.

அவற்றுள் மோசடி முறைப்பாடுகள் 900, ஊழல் முறைப்பாடுகள் 254, தவறாக சொத்து சேர்த்த முறைப்பாடுகள் 63 மற்றும் 47 சுற்றிவளைப்புக்கள் உள்ளன. இந்த அண்டின் ஆகஸ்ட் 15 வரையான காலத்தில் 28 சுற்றிவளைப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன. Read more

இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டம் சம்பந்தமாக தான் வருத்தமடைவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்சேலட் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 39வது கூட்டத்தொடர் சுவிஸ்சலாந்தின், ஜெனீவாவில் நேற்று ஆரம்பமானது. அதில் உரை நிகழ்த்தியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபித்தல் மற்றும் அதன் செயற்பாடுகள் சம்பந்தமாக திருப்தியடைகிறோம். Read more

இந்துக் கோவில்களில் மேற்கொள்ளப்படும் மிருகபலியைத் தடை செய்வதற்கான யோசனைக்கு, அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றுள்ள வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போதே, இதற்கான அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.