ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேசசபை உறுப்பினரும், கட்சியின் ஈவினை-புன்னாலைக்கட்டுவன் பிரதேச இணைப்பாளரும்,

புன்னாலைக்கட்டுவன் வடக்கு கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரும், புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலைய செயலாளரும், சமூக ஆர்வலருமான திரு.இரத்தினசிங்கம் கெங்காதரன்(J.P) அவர்களின் ஏற்பாட்டில், ஈவினை கற்பகப் பிள்ளையார் தேவஸ்தான பிரதமகுரு கெங்காதரக்குருக்கள் அவர்களின் ஆசீர்வாதத்துடன் 09.09.2018 ஞாயிற்றுக்கிழமை சிரமதானப்பணி இடம்பெற்றது. ஈவினை ஸ்ரீ கற்பகப்பிள்ளையார் தேவஸ்தானம் மற்றும் ஈவினை புன்னாலைக்கட்டுவன் இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன் இது இடம்பெற்றிருந்தது. ‘ஒன்றுபட்ட சுபீட்சமான அழகிய கிராமத்தை உருவாக்குவோம்’ என்னும் நோக்கில் எதிர்வரும் ஆலய உற்சவத்தை முன்னிட்டு மக்களின் பாதுகாப்புக் கருதி அனைவரும் ஒருங்கிணைந்து அபிவிருத்திப்பாதையில் இணையும்

மாபெரும் சிரமதானப்பணியாக ஈவினை ஸ்ரீகற்பகப்பிள்ளையார் ஆலயவீதியில் ஆரம்பமாகி ஆலயத்தைச் சூழவுள்ள மக்கள் பாவனையிலுள்ள சகல முக்கிய வீதிகளிலும் உள்ள பாரிய பற்றைகள் அகற்றப்பட்டு துப்பரவு செய்யும் பணிகள் இதன்போது மேற்கொள்ளப்பட்டன. காலை 8.00 மணியளவில் ஆரம்பமான சிரமதானப்பணி பிற்பகல் 6.30வரை நடைபெற்றிருந்தது.