மட்டக்களப்பு – பாசிக்குடா வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸா தெரிவித்தனர்.

கருங்காலிச்சோலை சுனாமி வீட்டுத்திட்டத்தில் வசிக்கும், தேவராசா கோகிலதாஸன் என்பவரே இவ்வாறு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து பாசிக்குடா நோக்கி சென்ற கார் ஒன்று அங்குள்ள சுற்றுலா விடுதிக்குள் உள்நுழைவதற்காக, பாதையை விட்டு குறுக்கே திரும்பும்போது அதே வீதி வழியாக காரின் பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள், குறித்த காரின் மீது மோதியதனால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.