கடந்த சில நாட்களிற்கு முன் பொலிஸாரால் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்ட 14 வயது மாணவி தீவிர சிகிச்சைப்பிரிவில், அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நீதி வேண்டி இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை மாற்று, பள்ளி மாணவரின் இரத்தம் குடிக்கும் இரத்தக் காட்டேறியே ஊரை விட்டு வெளியேற்று, சட்டத்தை மீறாதே சண்டித்தனம் செய்யாதே, முன்னை நாள் போராளிகள் என்ன உன் அடிமைகளா போன்ற வாசகங்களை தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவ்வார்ப்பாட்ட இடத்திற்கு சென்ற சிரேஸ்ட பொலிஸ் அத்தியேட்சகர் தென்னக்கோன் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணையின் அடிப்படையில் விரைவில் இதற்கான நல்ல தீர்வினை தருவதாகவும் தெரிவித்ததன் அடிப்படையில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முடிவிற்கு வந்தது.

இவ்வார்ப்பாட்டத்தில் கனகராயன்குளம் பாடசாலை மாணவர்கள், கனகராயன்குளம் மக்களும், அரசியல்வாதிகளும் கலந்து கொண்டிருந்தனர். இப்போராட்டத்திற்கு ஆதரவாக கனகராயன்குளம் வர்த்தகர்கள் கடைகளை மூடியிருந்தனர்.