நீர்கொழும்பு மேற்கு கடற் பகுதியில் சட்டவிரோத குடியேறிகள் 88 பேரை ஏற்றிச் சென்ற படகு ஒன்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்றுகாலை கைது செய்யப்பட்ட குறித்த படகில் இருந்த அனைவரும் இலங்கையர்கள் என தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் சட்டவிரோதமாக குடியேறும் நோக்கில் வேறு நாடு ஒன்றுக்கு பயணிக்க முற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் கொழும்பு மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் ரீயூனியன் தீவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரீயூனியன் தீவு என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு பிரெஞ்சுத் தீவாகும்.