Header image alt text

வியட்நாமின் ஹெநோய் நகரில் இடம்பெறும் ஆசியான் – உலக பொருளாதார மாநாட்டில் பங்குகொள்ள சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோட்டோவைச் சந்தித்துள்ளார்.

பிரதமரின் ஊடக பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவத்தை வலுப்படுத்துவது தொடர்பிலான இரு தரப்பு பேச்சு வார்த்தை இடம்பெற்றுள்ளது. Read more

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக கொண்டுவரப்படும் புதிய சட்டமூலம் சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கு அமைவதானதாக இருக்க வேண்டும் என தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழு இன்று ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் தெரிவித்துள்ளது.

மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்குமாறு அரசாங்கத்தை கோருகின்றோம் என்றும் அக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடரின் இன்றைய அமர்வில் இலங்கை விஜயம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே தன்னிச்சையாக தடுத்துவைத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

இந்தியா சென்றுள்ள இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியசாமி சார்பில் டெல்லியில் இன்று பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு சுப்ரமணிய சாமி அழைப்பு விடுத்திருந்தார். Read more

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரன் வேட்பாளராக இருக்கலாம் என்றும், அதனை கட்சியே முடிவு செய்யும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், ´த ஹிந்து´ பத்திரிகையுடன் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய எடுத்த தீர்மானம் இந்தியாவின் உள்ளக நடவடிக்கைகளில் ஒன்றாகும் என அவர் தெரிவித்துள்ளார். Read more

மன்னாரில் தொடர்சியாக அகழ்வு பணிகள், மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தும் பணிகள் மற்றும் அப்புறபடுத்தும் பணிகள் என பல்வேறு கட்டமாக செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

தொடர்சியாக சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் புதிதாக மீட்கப்பட்டும் அடையாளப்படுத்தப்பட்டும் வருகின்றது. இன்று 69 ஆவது தடவையாக குறித்த வளாகத்தில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது. விசேட சட்ட வைத்திய அதிகாரியின் தலைமையில் இன்று அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது. Read more

பேருவளை கடற்பரப்பில், கப்பலுடன், மீன்பிடி படகொன்று மோதி விபத்துக்குள்ளானதில், மீனவர்கள் நால்வர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில், இருவர் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவித்த பொலிஸார், ஒருவர் காப்பாற்றப்பட்டதாகவும் கூறினர்.

புத்தரின் உருவப்படம் பொறித்த சேலை அணிந்திருந்த இளம்பெண் சட்டத்தரணியொருவர், யாழ் பொலிசாரால் கைதுசெய்ய முயற்சிக்கப்பட்டதில் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குகளில் முன்னிலையாகுவதற்காக இளம்பெண் சட்டத்தரணியொருவர், இன்றுகாலை நீதிமன்ற வளாகத்துக்கு வந்திருந்தார். அவரது சேலையில் புத்தரின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருந்தது. அதனை அவதானித்த நீதிமன்ற பொலிஸார், யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகத்துக்கு அறிவித்தனர். Read more

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் பொலிஸ் ஜீப்பினை கடத்தியமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பிலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த ஜீப்பில் நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சென்றுள்ளனர். இதன்போது, ஜீப்பினை நிறுதிவிட்டு மூன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். Read more

கிளிநொச்சி பொதுச் சந்தையினை ரவுடிக்கும்பல் ஒன்று. இன்று மாலை ஆறு மணி முதல் ஆறு 45 மணி வரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்துள்ளது.

சினிமா பாணியில் நடந்துகொண்ட குறித்த ரவுடிக்கும்பல் சந்தைக்கு வந்தவர் போனவர் பெண்கள் என அனைவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மகேந்திரா ரக வாகனம் ஒன்றில் வந்திறங்கிய இருபது பேர் கொண்ட இளைஞர் குழு ஒன்று “எங்கேயடா குமார்” என்று கேட்டப்படி கையில் கத்தி, இரும்புகள், இரும்பினால் தாக்குதல்களை மேற்கொள்ளவென செய்யப்பட்ட கூரிய ஆயுதங்கள் என்பவற்றுடன் அங்கும் இங்கும் ஓடி திரிந்து அட்டகாசம் புரிந்துள்ளனர். Read more