யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் பொலிஸ் ஜீப்பினை கடத்தியமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பிலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த ஜீப்பில் நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சென்றுள்ளனர். இதன்போது, ஜீப்பினை நிறுதிவிட்டு மூன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். எனினும், மோதல் வலுப்பெற்றமையால் ஜீப்பில் இருந்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரும் அங்கு சென்ற போது, ஜீப் கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து இன்று அதிகாலை சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற மோதல் தொடர்பிலும் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.