வியட்நாமின் ஹெநோய் நகரில் இடம்பெறும் ஆசியான் – உலக பொருளாதார மாநாட்டில் பங்குகொள்ள சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோட்டோவைச் சந்தித்துள்ளார்.

பிரதமரின் ஊடக பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவத்தை வலுப்படுத்துவது தொடர்பிலான இரு தரப்பு பேச்சு வார்த்தை இடம்பெற்றுள்ளது. அத்துடன் இருநாடுகளுக்கும் இடையிலான கடல் மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் அவர்களுக்கு இடையில் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, லாவோஸ் பிரதமர் தொலங்யுங் சிசயுலித்தையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்துள்ளார்.

இதன்போது இலங்கைக்கும் லாவோஸ_க்கும் இடையிலான கலாசார தொடர்புகளை வலுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையர்களுக்காக, லாவோஸ் குடிவரவு குடியகல்வு சட்டத்தை தளர்த்தியமைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, லாவோஸ் பிரதமருக்கு தமது நன்றியினை தெரிவித்துக்கொண்டார். இதற்கிடையில் வியட்நாமின் பிரதமர் குயேன் சுவான் ஃபுக் ஐ நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.