இந்தியா சென்றுள்ள இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியசாமி சார்பில் டெல்லியில் இன்று பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு சுப்ரமணிய சாமி அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று கடந்த திங்கட்கிழமை இரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச டெல்லி சென்றார். இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று சந்தித்துப் பேச்சுவாரத்தை நடத்தியுள்ளார்.