பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக கொண்டுவரப்படும் புதிய சட்டமூலம் சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கு அமைவதானதாக இருக்க வேண்டும் என தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழு இன்று ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் தெரிவித்துள்ளது.

மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்குமாறு அரசாங்கத்தை கோருகின்றோம் என்றும் அக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடரின் இன்றைய அமர்வில் இலங்கை விஜயம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே தன்னிச்சையாக தடுத்துவைத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.