காவற்துறை சேவையில் ஒத்துழைத்து செயற்படுவது தொடர்பில் தென்கொரியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றன. தென்கொரியாவில் உள்ள இலங்கை தூதரகத்தை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மாதம் முதல்வாரத்தில் இளைஞர் விவகார அமைச்சர் சாகல ரத்நாயக்க தென்கொரியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இதன்போது அவர் முக்கியமான அரசாங்க அதிகாரிகளை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். இலங்கை காவற்துறையினரின் திறன்விருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் தென்கொரியா விருப்பம் வெளியிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.