ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)இன் 30வது ஆண்டு நிகழ்வாக நேற்று (12.09.2018) செட்டிகுளம், நீலியாமோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் அறநெறி பாடசாலையில் தரம் 6ல் கல்விபயிலும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

அமரர் மேரிகிறேஸ் சிங்காரம் அவர்களின் ஓராண்டு நினைவாக கழகத்தின் ஜேர்மன் கிளையினால் அனுப்பிவைக்கப்பட்ட அவருடைய மகனின் நிதிப்பங்களிப்பில் மேற்படி கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. 

மேற்படி கற்றல் உபகரணங்களை ஆசிரியை திருமதி புஸ்பா அவர்களிடம் கட்சியின் உபதலைவர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாவும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் வழங்கிவைத்தார்.