ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)இன் 30வது ஆண்டு நிகழ்வாக நேற்று (12.09.2018) செட்டிக்குளம் நீலியாமோட்டை சரஸ்வதி வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

அமரர் மேரிகிறேஸ் சிங்காரம் அவர்களின் ஓராண்டு நினைவாக கழகத்தின் ஜேர்மன் கிளையினால் அனுப்பிவைக்கப்பட்ட அவருடைய மகனின் நிதிப்பங்களிப்பில் மேற்படி கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. 

வித்தியால அதிபர் திருமதி கனகரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் செயற்குழு உறுப்பினரும், வடமாகாண சபை உறுப்பினருமான ஜீ.ரீ.லிங்கநாதன், கட்சியின் உப தலைவர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாவும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்), கட்சியின் தேசிய அமைப்பாளரும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினருமான த.யோகராஜா, கட்சியின் செயற்குழு உறுப்பினரும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினருமான வே.குகதாசன் (குகன்), வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் உத்திரியநாதன், கட்சியின் செயற்குழு உறுப்பினரும், செட்டிகுளம் பிரதேசசபை உறுப்பினருமான சு.ஜெகதீஸ்வரன்(சிவம்),

செட்டிகுளம் பிரதேசசபை உறுப்பினர்கள் சுஜீவன், பரிகரன் மற்றும் கட்சியின் வவுனியா மாவட்ட நிதிப்பொறுப்பாளர் நிசாந்தன், கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் செல்வகுமார், வித்தியாலய ஆசிரியர்கள். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டிருந்தனர்.