Header image alt text

யாழ்ப்பாணம் வலிவடக்கு (தெல்லிப்பளை) பிரதேச செயலகப் பிரிவில் இன்றுகாலை உத்தியோகபூர்வ பணி ஜனாதிபதி மக்கள் சேவை எனும் நடமாடும் சேவை இடம்பெற்றது.

யாழ். தெல்லிப்பளை யூனியன் கல்லூரி வளாகத்தில் வலிவடக்கு பிரதேச செயலாளர் திரு.சிவஸ்ரீ தலைமையில் இன்றுகாலை 8.30மணியளவில் மேற்படி நடமாடும் சேவை ஆரம்பமானது. ஜனாதிபதியின் பணிப்புரையின்கீழ் பிரதமரின் வழிகாட்டலில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.டி.கொடிகார, மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், மேலதிக அரச அதிபர், திறைசேரியின் மேலதிக ஆணையாளர் நாயகம், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ. சுமந்திரன், ஈஸ்வரபாதம் சரவணபவன், Read more

திருகோணமலை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் இன்றுகாலை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.5ற்கும் 3.8ற்கும் இடைப்பட்டதாக பதிவாகியுள்ளது என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் சந்திரவிமல் சிறிவர்தன கூறியுள்ளார். இன்று அதிகாலை 12.35 இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more

அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இன்றுகாலை முதல் 8 கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

9 வருடங்கள் வரை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் தம்மை விடுவிக்குமாறு கோரியே மேற்படி கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். தம் மீதான வழக்கு விசாரணைகள் திட்டமிட்டு காலம் தாழ்த்தப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். Read more