ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேசசபை உறுப்பினரும், கட்சியின் ஈவினை-புன்னாலைக்கட்டுவன் பிரதேச இணைப்பாளரும், சமூக ஆர்வலருமான இரத்தினசிங்கம் கெங்காதரன் (J.P)இன் ஏற்பாட்டில்

“ஐயை” உலகத் தமிழ் மகளிர் குழுமத்தின் அனுசரணையில் யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு மத்தாளோடை கிராமத்தில் கல்வி மேம்பாட்டிற்காக ஆரம்பக் கல்விப்பிரிவினருக்கான மாலை நேரக்கல்வி நிகழ்வுகள் 14.09.2018 வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன. இக் கல்விச் சேவையானது தொடர்ச்சியாக நடைபெறுவதற்கான முழுச் செலவினையும் “ஐயை” குழுமம் மேற்கொள்ளும் என்று இ.கெங்காதரன் அவர்கள் இந்த நிகழ்வின்போது தெரிவித்தார்.மேலும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் இந் நிகழ்வில் வைத்து வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.