வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்களின் 2018ம் ஆண்டுக்குரிய வருடாந்த பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து வறுமைக் கோட்டின்கீழுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

16.09.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)இன் செயற்குழு உறுப்பினரும், வடமாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்) இன் உபதலைவர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம், கட்சியின் தேசிய அமைப்பாளர் த.யோகராஜா (வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர்) கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் வே.குகதாசன் (வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்), சு.ஜெகதீஸ்வரன் (வவுனியா செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர்), க.மகேந்திரன் ஆகியோரும், செட்டிகுளம் பிரதேசபை உறுப்பினர் சுஜீவன், கட்சியின் மாவட்ட நிர்வாக அங்கத்தவர்கள் திருமதி ஹென்றி பெரேரா, மூர்த்தி ஆகியோரும் மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.