கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் சிலர், உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும், கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தே, இந்தக் கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனரென, சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று நண்பகலுக்குப் பின்னரே, அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனரென்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன. தங்களுக்கெதிரான வழக்கைத் துரிதமாக விசாரணைக்குட்படுத்த வேண்டும் அல்லது புனர்வாழ்வுக்கு உட்படுத்தி தங்களை விடுவிக்கவேண்டுமென, அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களென சந்தேகிக்கப்படும், அரசியல் கைதிகள் எட்டுப்பேர், கடந்த 14ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.