புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் 30வது ஆண்டு விழா 23.09.2028 அன்று மட்டக்களப்பு கிரான்குளம் சீ மூன் ஹோட்டல் மண்டபத்தில் நடைபெற்றது.

கட்சியின் உப தலைவரும் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான ம.சிவநேசன் (பத்தன்) தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவின் பிரதம அதிதியாக கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன் (பா.உ) அவர்களும் சிறப்பு அதிதியாக கட்சியின் உப தலைவர்களுள் ஒருவரான ச.வியாளேந்திரன்(பா.உ) அவர்களும் கௌரவ அதிதிகளாக. வட மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், பா.கஜதீபன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

திரு. கிருபைரெத்தினம் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து ம.சிவநேசன், ந.ராகவன் மற்றும் அதிதிகள் உரையாற்றியிருந்தனர்.விழாவின் பிரதம நிகழ்வுகளாக கட்சியின் கனடா கிளையினரின் நிதியுதவி மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த வறிய குடும்ப மாணவர்கள் 10 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் கட்சியின் ஜெர்மன் கிளையின் நிதியுதவி மூலம் 30 வறிய குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு உடுபுடவைகள்
வழங்கிவைக்கப்பட்டிருந்தன.

மேலும் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவான கட்சியின் உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.