சம்பள முரண்பாடு சம்பந்தமாக அரசாங்கம் சரியான தீர்வு வழங்காமையின் காரணமாக எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக சுங்க அதிகாரிகள் தொழிற்சங்கம் கூறியுள்ளது.

எதிர்வரும் 04 மற்றும் 05ம் திகதிகளில் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் சமீர விக்ரமசிங்க கூறியுள்ளார். அன்றைய தினங்களில் சுங்க அதிகாரிகள் அனைவரும் சுகயீன விடுமுறை செய்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக சமீர விக்ரமசிங்க கூறியுள்ளார்.