Header image alt text

கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றிய போதநாயகி நடராஜாவின் மரணத்துக்கு நீதிக்கோரி, இன்றையதினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்துக்குள் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றிருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடைபவனியாக சிறிது தூரம் சென்று போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர். விரிவுரையாளர் போதநாயகியின் மரணத்துக்கான காரணத்தை உடனடியாக கண்டறியுமாறும், சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கவேண்டுமெனவும், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்தனர். Read more

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புகொண்டுள்ளதாக தெரிவித்து பயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வைத்து கைதான இலங்கை இளைஞர் மொஹமட் நிசாம்தீன்(வயது 25) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சதி திட்டங்களை பதிவு செய்து வைத்திருந்ததாக கூறப்படும் குறிப்பு புத்தகத்தில் இருந்த கையெழுத்து, அவரின் கையெழுத்துடன் பொருந்தவில்லை என்பதால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன. Read more

இலங்கைக்கும், தமிழகத்துக்கும் இடையிலான பயணிகள் படகு சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இராமேஸ்வரத்துக்கும், தலைமன்னாருக்கும் இடையிலான இந்த படகு சேவையின் ஊடாக வடமாகாணத்தின் சுற்றுலாத்துறை மிகப்பெரிய நன்மை அடையும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமானநிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன. Read more

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் அந்த போராட்டம் இடம்பெற்றது. உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடன் நிறைவேற்றக் கோரியும், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரியும், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடன் நீக்கக்கோரியும் இந்த போராட்டம் இடம்பெற்றது. Read more

வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட மூன்று அரசியல் கைதிகள் இன்று சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். ஒரு வருட புனர்வாழ்வின் பின்னர் இவர்கள் இன்று சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குத் தேவையான தொழிற்பயிற்சி உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு நிலையத்தின் வன்னி பிராந்தியப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இவர்களை சமூகமயப்படுத்துவதற்கான நிகழ்வு பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது. Read more

வவுனியா மூன்று முறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு அதிபரை நியமிக்க கோரி இன்று வவுனியா தெற்கு வலக கல்வி பணிமனைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சுமார் 350 மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையில் கா.பொ.த சாதாரண தரம் வரையான வகுப்புகள் உள்ள நிலை, கடந்த 10 மாதங்களாக குறித்த பாடசாலைக்கு அதிபர் நியமிக்கப்படாமையினால் கல்வி மற்றும் வளப்பற்றாக்குறைகள் தொடர்பான முறையான நடவடிக்கைகளை எடுக்க முடியாதுள்ளதாக தெரிவித்தும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துமே பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்களினால் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. Read more

முகமூடிகள் அணிந்து வாள்களுடன் நுழைந்த வாள்வெட்டுக் கும்பலொன்று யாழ். கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றை அடித்து நொருக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.

கொக்குவில் பகுதியில் நேற்றுமாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் வீட்டிலிருந்த பல பொருட்களும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டிற்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களின் முகமூடிகளை அணிந்து கொண்டு உள்நுழைந்த வாள்வெட்டுக் கும்பல் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கிவிட்டு தப்பியோடியுள்ளது. Read more

மட்டக்களப்பு – பெரியபுல்லுமலையில் தண்ணீர் போத்தல் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 4ஆம் திகதி மட்டக்களப்பு கோட்டையிலுள்ள கச்சேரியை முற்றுகையிடும் மக்கள் போராட்டமும் அதனைத் தொடர்ந்து காந்தி பூங்காவில் தான் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகன் தெரிவித்தார்.

இது தொடர்பாக மோகன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ‘குறித்த தண்ணீர் தொழிற்சாலை அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அமைக்கப்பட்டு வருவது மட்டக்களப்பு மாவட்டத்தின் அடிப்படை பிரச்சினையில் கை வைக்கப்பட்டுள்ள மிகவும் மோசமான செயற்பாடு ஆகும். Read more