ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புகொண்டுள்ளதாக தெரிவித்து பயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வைத்து கைதான இலங்கை இளைஞர் மொஹமட் நிசாம்தீன்(வயது 25) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சதி திட்டங்களை பதிவு செய்து வைத்திருந்ததாக கூறப்படும் குறிப்பு புத்தகத்தில் இருந்த கையெழுத்து, அவரின் கையெழுத்துடன் பொருந்தவில்லை என்பதால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன. மேலும் காவல்துறை பொறுப்பில் கையேட்கப்பட்டிருந்த அவரின் கணனியிலோ, கையடக்க தொலைபேசியிலோ எவ்வித தீவிர நடவடிக்கைகள் குறித்த தகவல்களும் இல்லை என தெரியவந்துள்ளது.

அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மெல்கம் டர்ன்புல் மற்றும் முன்னாள் வெளிவிவார அமைச்சர் ஜூலி பிசப் ஆகியோர்மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாக கூறி கடந்த மாதம் 30ஆம் திகதி இவர் கைதானார். இவர் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் மருமகன் என தெரிவிக்கப்படுகின்றது