இலங்கைக்கும், தமிழகத்துக்கும் இடையிலான பயணிகள் படகு சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இராமேஸ்வரத்துக்கும், தலைமன்னாருக்கும் இடையிலான இந்த படகு சேவையின் ஊடாக வடமாகாணத்தின் சுற்றுலாத்துறை மிகப்பெரிய நன்மை அடையும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமானநிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன. மேலும் புலம்பெயர்ந்து வாடும் ஈழத் தமிழர்கள் வடமாகாணத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.