கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றிய போதநாயகி நடராஜாவின் மரணத்துக்கு நீதிக்கோரி, இன்றையதினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்துக்குள் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றிருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடைபவனியாக சிறிது தூரம் சென்று போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர். விரிவுரையாளர் போதநாயகியின் மரணத்துக்கான காரணத்தை உடனடியாக கண்டறியுமாறும், சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கவேண்டுமெனவும், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்தனர். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் இணைந்தே இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடமையாற்றிய வவுனியா – ஆசிகுளம், கற்குளம் பகுதியைச் சேர்ந்த 29வயதான நடராசா போதநாயகி என்ற பெண் விரிவுரையாளர் கடந்த 21ம் திகதி திருகோணமலை கடற்கரை பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.