முகமூடிகள் அணிந்து வாள்களுடன் நுழைந்த வாள்வெட்டுக் கும்பலொன்று யாழ். கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றை அடித்து நொருக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.

கொக்குவில் பகுதியில் நேற்றுமாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் வீட்டிலிருந்த பல பொருட்களும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டிற்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களின் முகமூடிகளை அணிந்து கொண்டு உள்நுழைந்த வாள்வெட்டுக் கும்பல் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கிவிட்டு தப்பியோடியுள்ளது.வாள்வெட்டுக் குழுக்களுக்கு இடையிலான மோதல் காரணமாகவே குறித்த வீடு அடித்து நொருக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் கடந்த தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் இருவர் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடம் 03 ஆயுதங்கள் இருந்ததாக காவற்துறை தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் – சுன்னாகம் பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.