2018ம் ஆண்டுக்குரிய வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழா 30.09.2018 ஞாயிற்றுக்கிழமை கல்வி அமைச்சின் செயலாளர் திரு சத்தியசீலன் அவர்களின் தலைமையில் கற்சிலைமடு பண்டாரவன்னியன் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினர் வடக்கு மாகாண முதலமைச்சர் கெளரவ க.வி.விக்னேஸ்வரன் அவர்கள், சிறப்பு விருந்தினர்களான வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கெளரவ க.சர்வேஸ்வரன்,வடக்கு மாகாண விவசாய அமைச்சர் கெளரவ க.சிவநேசன், வடக்கு மாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் கெளரவ கமலேஸ்வரன், ,வடக்கு மாகாணசபை உறுப்பினர் கெளரவ ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் கெளரவ விருந்தினர்களான திரு.ம.பிரதீபன் பிரதேச செயலாளர் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான், திரு.கு.பிரபாகர மூர்த்தி பிரதேச செயலாளர் துணுக்காய் ,செல்வி.ந.ரஞ்சனா பிரதேச செயலாளர் மாந்தை கிழக்கு,மற்றும் பிரதேச,மாவட்ட கலாசார உத்தியோகத்தர்கள்,திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.இதன்போது சிறந்த நூற்பரிசு விருது,முதலமைச்சர் விருது ஆகிய விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன. தமிழில் தமிழரின் பாரம்பரியத்தை விளக்கும் ஊர்வலமும் இடம்பெற்றமை சிறப்புக்குரிய ஓர் விடயமாகும்.