மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபை அமைச்சர்களின் செயலாளர்களாக 75 சதவீதம் கடமையாற்றுபவர்கள் குறிப்பிட்ட அமைச்சர்களின் உறவினர்கள் என அமைச்சர்களின் செயலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, பல அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மாகாண முதலமைச்சர்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர்களுக்கு நாட்டை முன்னேற்றுவது குறித்த புதிய அபிப்பிராயங்களை வழங்குவதற்கு எவரும் இல்லையென்றும், அந்த சங்கத்தின் செயலாளர் தேசகீர்த்தி அஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். எனவே அமைச்சுப் பொறுப்புகளை வகிக்கும் அமைச்சர்களின் செயலாளர் பதவிகளுக்கு குடும்ப உறவுகளை இணைத்துக்கொள்ள முடியாத வகையில் 1994ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தை எதிர்வரும் காலங்களிலும் நடைமுறைப்படுத்துமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கட்சி தலைவர்களிடம் யோசனையொன்றை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.