வவுனியா நகரின் பல பிரதேசங்களில் ஆவா குழுவின் பெயரில் துண்டுப் பிரசுரங்கள் கண்டெடுக்கப்பட்டதாக வவுனியா பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவின் குருமங்காடு, வைரவபுளியங்குளம், புகையிரத வீதி, கண்டி வீதி ஆகிய இடங்களில் இந்த கையேடுகள் பங்கிடப்பட்டுள்ளதாக வவுனியா பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

நாம் மக்களின் பிரச்சினைகளுக்கு எப்போதும் உடனிருப்போம், நாம் மக்களின் எதிரியல்ல, எந்தவொரு நேரத்திலும் வவுனியா நகரத்தின் பல இடங்களில் எமது உறுப்பினர்கள் இருப்பார்கள் என்ற வாசகங்கள் அந்த துண்டுப் பிரசுரங்களில் இருந்துள்ளன. குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த குழுவினரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.