தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் சமூக செயற்றிட்டத்தின் மூலம் ஒரு தொகுதி கூரைத் தகரங்கள் இன்றையதினம் [03.02.2018] கழகத்தின் செயலாளர் பி.கெர்சோன்(கரிஷ்) தலைமையில் வவுனியா தெற்கிலுப்பைக் குளத்தில் நடைபெற்றது.
இவ் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான புளொட் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும் தற்போதைய நகரசபை உறுப்பினருமான க. சந்திரகுலசிங்கம் [மோகன் ] புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினரும் நகரசபையின் உறுப்பினருமான சுந்தரலிங்கம் காண்டீபன்

மற்றும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் பொருளாளர் நிகேதன் உறுப்பினர்களான சதீஸ் மற்றும் கோபாலக்ரிஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்
இவ் நிகழ்விற்க்கான நிதியினை லண்டனில் உள்ள கழகத்தோழர் எதிர்வீரசிங்கம் முரளிதரன் அவர்கள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.