புளொட் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பாராளுமன்ற உறுப்பினருக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து பெறப்பட்ட ஒரு தொகுதி பொருட்கள் இன்று உடுவில் பிரதேச செயலகத்தில் வைத்து பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

இதன்கீழ் யாழ். சங்குவேலி பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு ரூபா 70,000 பெறுமதியிலான தளபாடங்கள் சங்கத்தின் பிரதிநிதி பிரதீபன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் சங்குவேலி இந்து அறநெறி பாடசாலைக்கு ரூபா 100,000 பெறுமதியிலான பிளாஸ்ரிக் கதிரைகள் அறநெறிப் பாடசாலையின் அதிபரும், வலிதெற்கு பிரதேசசபை உறுப்பினருமாகிய திருமுருகராஜன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. மேலும், யாழ். ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாலயத்திற்கு ரூபா 70,000 பெறுமதியிலான பிளாஸ்ரிக் கதிரைகள் வித்தியாலய அதிபர் பரமேஸ்வரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் கந்தரோடை இளைஞர் கழகத்திற்கு ரூபா 60,000 பெறுமதியிலான சீருடைகள் கழகத்தின் தலைவர் தர்சன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. கழகத்தின் உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், யுகராஜ் மற்றும் பிரதேச செயலாளர் ஜெயகாந்த், உதவித் திட்டப் பணிப்பாளர் திருமதி ரட்ணேஸ்வதி மதியுகன், உதவி பிரதேச செயலாளர் திருமதி மலர்வேணி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.