03.10.18 நடைபெற்ற வடக்கு கிழக்கு ஜனாதிபதி அபிவிருத்தி செயலணியில் இரண்டாவது தடவையாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நிலைமைகளை தெளிவாக எடுத்துக் கூறினார். பல நிமிடங்கள் இது தொடர்பாக வாத பிரதி வாதங்கள் இடம் பெற்றது. பாராளுமன்ற உறுப்பினரின் கருத்துக்களை செவிமடுத்த ஜனாதிபதி புல்லுமலை தொழிற்சாலைக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்தார். நிலத்தடி நீரை உறிஞ்சியதால் இந்தியாவில் பல கிராமங்கள் அழிந்தன என பாராளுமன்ற உறுப்பினர் கூறியபோது அதை ஏற்றுக் கொண்ட ஜனதிபதி எத்தியோப்பியா நீர் பஞ்சத்துக்கு காரணம் இதுவே என கூறினார். நீர் வளத்தை முறைகேடாக உறிஞ்சுகின்ற தொழிற்சாலைகளை கண்டித்து பேசினார். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவால் தெரிவு செய்யப்பட்ட தொழில்சார் துறை குழுவினரின் அறிக்கையும் இத் தொழிற்சாலை அமைவதற்கு எதிராகவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் ஆர்ப்பாட்டங்கள், கையெழுத்து வேட்டைகள், பூரண கர்த்தாள் மூலம் இத் தொழிற்சாலைக்கு தமது எதிர்பை வெளிப்படுத்திருந்தனர்.
ஆகவே மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே இத் தொழிற்சாலை அப் பகுதியில் அமையும் ஆயின் மட்டக்களப்பு தமிழ் மக்களுக்கு மாத்திரம் அல்ல அனைத்தும் சிங்கள முஸ்லீம் மக்களுக்கு செய்யும் தூரோகமாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் கூறினார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி தொழிற்சாலை தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் எதிர்வரும் மாதம் 8 திகதிக்கு முன்னர் சமர்பிக்கும் படி பணித்தார். அத்துடன் தேவபுரம் அரிசி ஆலையை விரைவில் தொடங்குவது தொடர்பாகவும், படுவான்கரையில் இருந்து செல்லும் உன்னிச்சை தண்ணீர் நகர் பகுதிகளுக்கு கிடைக்கிறது. ஆனால் இன்றும் படுவான்கரையில் பல பகுதிகளில் மக்கள் குடிபதற்கு நீர் இன்றி கஸ்ர படுகின்றனர் எனவே விரைவில் அவர்களுக்கான குடிநீர் வளங்கபட வேண்டும் என்றும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன்.