யாழ். இளவாலை கன்னியர்மடம் மகாவித்தியாலயத்தின் தேசிய வெற்றியார்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்றுமுற்பகல் வித்தியாலய அதிபர் அருட்சகோதரி சகாயநாயகி பஸ்தியாம்பிள்ளை அவர்களின் தலைமையில் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அருட்பணி யேசுரெட்ணம் அடிகளாரின் ஆசியுரையுடன் ஆரம்பமானது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்;கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக சண்டிலிப்பாய் கோட்டக்கல்வி அதிகாரி எஸ். சிறீஷகுமரன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக இளவாலை கன்னியர் மடத்தின் குழுத் தலைவி அருட்சகோதரி குறூஸ், மாரிசன்கூடல் பங்குத்தந்தை அருட்பணி தினேஸ், ஒளியரசி சஞ்சிகையின் உதவி ஆசிரியை திருமதி சூரியகுமார், அருட்சகோதரிகள், பயிற்றுவிப்பாளர்களான ஜென்ஸ்டன், திருமதி ஜென்ஸ்டர், கஜன், அபி, கரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். இதன்போது விளையாட்டுத் துறையில் தேசிய மட்டத்தில் வெற்றியீட்டிய அணியினர்க்கான கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இதன்படி தேசிய ரீதியில் உடற்பயிற்;சியில் முதலாமிடத்தைப் பெற்ற அணியினர், தேசிய ரீதியில் கபடிப் போட்டியில் இரண்டாமிடத்தைப் பெற்ற அணியினர், தேசிய ரீதியில் எறிபந்தில் மூன்றாம் இடத்தைப் பெற்ற அணியினர் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். அத்துடன் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகள் பெற்ற மூன்று மாணவிகள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். இந் நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், அயல் பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், நிர்வாக உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.