இவ் வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மட்டக்களப்பு தாழங்குடா ஸ்ரீவிநாயகர் வித்தியாலயத்தைச் சேர்ந்த தெ.திசாந் என்ற மாணவனுக்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் கனடா கிளையின் அனுசரணையில் நேற்று (08.10.2018) திங்கட்கிழமை துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.நல்லதம்பி, பாடசாலையின் அதிபர் சா.மதிசுதன் மண்முனை மேற்கு உபதவிசாளர் பொ.செல்லத்துரை (கேசவன்), மாநகர சபை உறுப்பினர் ம.நிஸ்கானந்தராஜா(சூட்டி), ஆசிரியரும் மாவட்ட குழு உறுப்பினருமான கமலநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.