வடக்கு மாகாண தேசிய ஓய்வூதியர் தின விழா யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (08.10.2018) இடம்பெற்றது. யாழ். மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது விருந்தினர்கள் கௌரவித்து அழைக்கப்பட்டு மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது.

தொடர்ந்து நடனம் கவிதை, பேச்சு என பல்வேறு கலை நிகழ்வுகள், இடம்பெற்றன. இதன்போது வடமாகாணத்தில் ஓய்வூதியர்களுக்கிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களும் சிறந்த செயற்பாட்டாளர்களும் கௌரவிக்கப்பட்டனர். மேற்படி நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், அரசாங்க அதிபர்கள், அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.