யாழ். சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் இன்று இடம்பெற்ற முன்னாள் அதிபர் வைஸர் சிவசுப்பிரமணியம் அவர்களின் ஞாபகார்த்த நினைவுப்பேருரை ஆற்றவந்த அமைச்சர் மனோ கணேசன் அவர்கள்

பேருரை நிகழ்த்தியபின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினருடன் சுன்னாகம் தபால் நிலையத்திற்கு விஜயம் செய்தார். இதன்போது அமைச்சரின் நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள (261லட்சம் ரூபாய்) தபால் நிலையத்திற்கான அமைவிடத்தினை நேரில் பார்வையிட்டதுடன், சுன்னாகம் தபால்நிலைய தபாலதிபர் திருமதி ராஜராஜன் உள்ளிட்ட தபால்நிலைய ஊழியர்கள், சுன்னாகம் நகர அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சுன்னாகம் ஐயனார் ஆலயத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டார்.